Posts

கதகளி பற்றி கூடுதலாக அறிந்துகொள்ள

  கதகளி கைமுத்திரைகளை அறிந்துகொள்ள: கதகளியின் அடிப்படை முத்திரைகள் 24. அதிலிருந்து கிட்டத்தட்ட 200 முத்திரைகளை கதகளி பயன்படுத்துகிறது. உண்மையில் கதகளி கைமுத்திரைகளை ஒரே வீச்சில் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தும் காணொளிகளே இல்லை. கலாமண்டலம் விஜயகுமார் என்ற கதகளி கலைஞர் கதகளியில் பயன்படுத்தப்படும் அனைத்தும் முத்திரைகளையும் ஆங்கிலத்தில் விளக்கும்   30 வீடியோக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வீடியோவும் 10 நிமிடம் இருக்கும். உதாரணமாக, கடகம் என்பது ஒரு அடிப்படை முத்திரை. ஒரு வீடியோவில் அந்த அடிப்படை முத்திரையை பயன்படுத்தி கண்ணாடி, பெண், தங்கம், வெள்ளி, மாலை போன்றவை எப்படி கடக முத்திரையை வைத்து காட்டப்படுகிறது   என்பதை விளக்குவார்.   அப்படி 24 வீடியோக்கள் உள்ளன. 30 வீடியோக்கள் கொண்ட யூட்யூப் பக்கம்: https://www.youtube.com/@kathakali9128   இது பதிவுசெய்யப்பட்ட கதகளி நிகழ்வு. இந்த வீடியோவில் ஒவ்வொரு தருணமும் என்னென்ன என்ற ஆங்கில சப் டைட்டில் உள்ளது. அறிமுகத்திற்கு உதவியாக இருக்கும். https://www.youtube.com/watch?v=49lTzt1cZgI   கதகளியின் ஆட்டக்கதைகளின் ஆங்கி...

கதகளி அறிமுகம்

                                                                 கதகளி ஒரு அறிமுகம் கேரளத்தில் உத்தேசமாக பதினேழாம் நூற்றாண்டில் கதகளி என்ற நிகழ்த்துகலை உருவானது. அடிப்படையில் செவ்வியல் கலை என்றாலும் கதகளி வலுவான நாட்டார் அம்சங்களையும் கொண்டது. கேரளத்தின் அனுஷ்டான கலையான தெய்யம், சம்ஸ்கிருத செவ்வியல் நாடகவடிவமான கூடியாட்டம், பாகவத்தை அடிப்படையாகக்கொண்ட கிருஷ்ணனாட்டம், ராமாயணக்கதையை அடிப்படையாகக்கொண்ட ராமானாட்டம் போன்ற கலைகளிலிருந்து கதகளி உருவாகியிருக்கிறது. கதகளியை உருவாக்கியவர் கேரளத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்த அரசர் கோட்டயம் தம்புரான் (கிபி 1665- 1725). கதகளியின் பல கதைவடிவங்களை அவர்தான் எழுதியிருக்கிறார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்தும் பாகவதம், தேவிபாகவதம் போன்ற புராணங்களிலிருந்தும் கதகளி தனக்கான கதைவடிவத்தை உருவாக்கிக்கொள்கிறது, அந்த கதைவடிவத்தின் பெயர் ஆட்டக்கதை. ஆட்டக்கதை சம்ஸ்கிருத சொற்கள் அதிகம் கொ...

செவ்வியல் கலைரசனை

நண்பர்களுக்கு, கதகளி பற்றிய அறிமுகம்: கேரளத்தில் உத்தேசமாக பதினேழாம் நூற்றாண்டில் கதகளி என்ற நிகழ்த்துகலை உருவானது. அடிப்படையில் செவ்வியல் கலை என்றாலும் கதகளி வலுவான நாட்டார் அம்சங்களையும் கொண்டது. கேரளத்தின் அனுஷ்டான கலையான தெய்யம், சம்ஸ்கிருத செவ்வியல் நாடகவடிவமான கூடியாட்டம், பாகவத்தை அடிப்படையாகக்கொண்ட கிருஷ்ணனாட்டம், ராமாயணக்கதையை அடிப்படையாகக்கொண்ட ராமானாட்டம் போன்ற கலைகளிலிருந்து கதகளி உருவாகியிருக்கிறது. கதகளியை உருவாக்கியவர் கேரளத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்த அரசர் கோட்டயம் தம்புரான் (கிபி 1665- 1725). கதகளியின் பல கதைவடிவங்களை அவர்தான் எழுதியிருக்கிறார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்தும் பாகவதம், தேவிபாகவதம் போன்ற புராணங்களிலிருந்தும் கதகளி தனக்கான கதைவடிவத்தை உருவாக்கிக்கொள்கிறது, அந்த கதைவடிவத்தின் பெயர் ஆட்டக்கதை. ஆட்டக்கதை சம்ஸ்கிருத சொற்கள் அதிகம் கொண்ட மலையாள மொழியில் இருக்கும். கதகளியின் கவித்துவமும், நாடகீயமும், கதாப்பாத்திரங்களின் உணர்வுநிலைகளும், பரிணாமங்களும் “ஆட்டக்கதை”யில் எழுத்துவடிவில் இருக்கிறது. அடிப்படையில் ஆட்டக்கதை ஓரளவுக்கு இலக்கியப்பிரதிக்க...