கதகளி பற்றி கூடுதலாக அறிந்துகொள்ள
கதகளி கைமுத்திரைகளை அறிந்துகொள்ள: கதகளியின் அடிப்படை முத்திரைகள் 24. அதிலிருந்து கிட்டத்தட்ட 200 முத்திரைகளை கதகளி பயன்படுத்துகிறது. உண்மையில் கதகளி கைமுத்திரைகளை ஒரே வீச்சில் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தும் காணொளிகளே இல்லை. கலாமண்டலம் விஜயகுமார் என்ற கதகளி கலைஞர் கதகளியில் பயன்படுத்தப்படும் அனைத்தும் முத்திரைகளையும் ஆங்கிலத்தில் விளக்கும் 30 வீடியோக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வீடியோவும் 10 நிமிடம் இருக்கும். உதாரணமாக, கடகம் என்பது ஒரு அடிப்படை முத்திரை. ஒரு வீடியோவில் அந்த அடிப்படை முத்திரையை பயன்படுத்தி கண்ணாடி, பெண், தங்கம், வெள்ளி, மாலை போன்றவை எப்படி கடக முத்திரையை வைத்து காட்டப்படுகிறது என்பதை விளக்குவார். அப்படி 24 வீடியோக்கள் உள்ளன. 30 வீடியோக்கள் கொண்ட யூட்யூப் பக்கம்: https://www.youtube.com/@kathakali9128 இது பதிவுசெய்யப்பட்ட கதகளி நிகழ்வு. இந்த வீடியோவில் ஒவ்வொரு தருணமும் என்னென்ன என்ற ஆங்கில சப் டைட்டில் உள்ளது. அறிமுகத்திற்கு உதவியாக இருக்கும். https://www.youtube.com/watch?v=49lTzt1cZgI கதகளியின் ஆட்டக்கதைகளின் ஆங்கி...