கதகளி பற்றி கூடுதலாக அறிந்துகொள்ள

 

கதகளி கைமுத்திரைகளை அறிந்துகொள்ள:

கதகளியின் அடிப்படை முத்திரைகள் 24. அதிலிருந்து கிட்டத்தட்ட 200 முத்திரைகளை கதகளி பயன்படுத்துகிறது. உண்மையில் கதகளி கைமுத்திரைகளை ஒரே வீச்சில் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தும் காணொளிகளே இல்லை. கலாமண்டலம் விஜயகுமார் என்ற கதகளி கலைஞர் கதகளியில் பயன்படுத்தப்படும் அனைத்தும் முத்திரைகளையும் ஆங்கிலத்தில் விளக்கும்  30 வீடியோக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வீடியோவும் 10 நிமிடம் இருக்கும். உதாரணமாக, கடகம் என்பது ஒரு அடிப்படை முத்திரை. ஒரு வீடியோவில் அந்த அடிப்படை முத்திரையை பயன்படுத்தி கண்ணாடி, பெண், தங்கம், வெள்ளி, மாலை போன்றவை எப்படி கடக முத்திரையை வைத்து காட்டப்படுகிறது  என்பதை விளக்குவார்.  அப்படி 24 வீடியோக்கள் உள்ளன.

30 வீடியோக்கள் கொண்ட யூட்யூப் பக்கம்:

https://www.youtube.com/@kathakali9128

 

இது பதிவுசெய்யப்பட்ட கதகளி நிகழ்வு. இந்த வீடியோவில் ஒவ்வொரு தருணமும் என்னென்ன என்ற ஆங்கில சப் டைட்டில் உள்ளது. அறிமுகத்திற்கு உதவியாக இருக்கும்.

https://www.youtube.com/watch?v=49lTzt1cZgI

 

கதகளியின் ஆட்டக்கதைகளின் ஆங்கில வடிவம்:

கதகளிகளின் ஆட்டக்கதைகளை மலையாளத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் Agatha Jane pillar. இவர் எழுதிய முன்னுரையும் முக்கியமானது. இந்த புத்தகங்கள் நான்கு பாகங்கள் கொண்டது. இதை Download செய்து கொள்ளவும். http://kathakaliplays.com/Welcome.html நண்பர்கள் எந்த கதகளியை பார்க்கச்சென்றாலும் அந்த குறிப்பிட்ட கதகளியின் ஆங்கில வடிவம் இந்த நூலில் இருக்கும். அதை வாசித்துக்கொள்ளவும். கதகளி பார்க்கும்போது இந்த புத்தகம் கையில் இருப்பது பயனுள்ளது.  

கதகளியைப்பற்றிய சுருக்கமான அறிமுகத்திற்கு:

David Bollandஇன் guide to kathakali சுருக்கமான, அழகிய நூல். இந்து புராணங்கள் பற்றியும், ஆட்டக்கதைகள் பற்றியுமான அறிமுகமும் இந்த நூலில் உள்ளது.

https://archive.org/details/in.ernet.dli.2015.201335/page/n7/mode/2up

கதகளியை பற்றி விரிவான அழகியல்ரீதியாக அறிமுகத்திற்கு :

Philip A Zairalli யின்  " The kathakali complex" என்ற நூலும்,  ”kathakali Dance-Drama: Where god and demons Come to play” என்ற நூலும்   மிகவும் பயனுள்ளது.


https://www.exoticindiaart.com/book/details/kathakali-complex-actor-performance-and-structure-old-and-rare-book-idh428/

https://www.amazon.in/Kathakali-Dance-Drama-Where-Gods-Demons/dp/041519282X

 

Comments

Popular posts from this blog

செவ்வியல் கலைரசனை

கதகளி அறிமுகம்