செவ்வியல் கலைரசனை

நண்பர்களுக்கு,

கதகளி பற்றிய அறிமுகம்:

கேரளத்தில் உத்தேசமாக பதினேழாம் நூற்றாண்டில் கதகளி என்ற நிகழ்த்துகலை உருவானது. அடிப்படையில் செவ்வியல் கலை என்றாலும் கதகளி வலுவான நாட்டார் அம்சங்களையும் கொண்டது. கேரளத்தின் அனுஷ்டான கலையான தெய்யம், சம்ஸ்கிருத செவ்வியல் நாடகவடிவமான கூடியாட்டம், பாகவத்தை அடிப்படையாகக்கொண்ட கிருஷ்ணனாட்டம், ராமாயணக்கதையை அடிப்படையாகக்கொண்ட ராமானாட்டம் போன்ற கலைகளிலிருந்து கதகளி உருவாகியிருக்கிறது. கதகளியை உருவாக்கியவர் கேரளத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்த அரசர் கோட்டயம் தம்புரான் (கிபி 1665- 1725). கதகளியின் பல கதைவடிவங்களை அவர்தான் எழுதியிருக்கிறார்.


ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்தும் பாகவதம், தேவிபாகவதம் போன்ற புராணங்களிலிருந்தும் கதகளி தனக்கான கதைவடிவத்தை உருவாக்கிக்கொள்கிறது, அந்த கதைவடிவத்தின் பெயர் ஆட்டக்கதை. ஆட்டக்கதை சம்ஸ்கிருத சொற்கள் அதிகம் கொண்ட மலையாள மொழியில் இருக்கும். கதகளியின் கவித்துவமும், நாடகீயமும், கதாப்பாத்திரங்களின் உணர்வுநிலைகளும், பரிணாமங்களும் “ஆட்டக்கதை”யில் எழுத்துவடிவில் இருக்கிறது. அடிப்படையில் ஆட்டக்கதை ஓரளவுக்கு இலக்கியப்பிரதிக்கு நெருக்கமானதுதான் என்றாலும் அது கதகளியின் உத்தேச வடிவம் மட்டும்தான். அந்த எழுத்துவடிவத்தின் ஒவ்வொரு வர்ணனையையும், உரையாடலையும், அவற்றின் கற்பனை சாத்தியங்களையும் விரிவுபடுத்தி அரங்கில் நிகழ்த்துவது வழியாகத்தான் கதகளி செயல்படுகிறது. ஆட்டக்கதை பாடல் வடிவத்தில் இருக்கும். அந்த பாடல்வடிவம் கர்நாடக சங்கீதத்தின் இசை இலக்கணத்தை அடிப்படையாக வைத்து ஸ்வரப்படுத்தப்பட்ட வடிவம் கொண்டது. கதகளி கர்நாடக சங்கீதத்தை அப்படியே பயன்படுத்துவதில்லை. அதில் சில வேறுபாடுகளுடன் கதகளி தனக்கான இசையை உருவாக்கிக்கொள்கிறது.


இன்றைய நிலவரப்படி மகாபாரதம், ராமாயணம், பாகவதம் இவற்றின் முக்கியமான கதைச்சந்தர்ப்பங்களை அடிப்படையாகக்கொண்ட சுமார் 20 கதகளிகள் நிகழ்த்தப்படுகின்றன. ஒருவர் கதகளி பார்க்க ஆரம்பித்தால் 3 மாதங்களில் அத்தனையையும் பார்த்துவிடலாம். அதே கதைகள்தான் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு பார்வையாளனாக ஏற்கனவே பார்த்த கதகளியை மீண்டும் ஏன் பார்க்கவேண்டும்? செவ்வியல் கலைகளின் முக்கியமான கூறான கலைஞனின் ‘மனோதர்மம்’ என்ற அம்சம்தான் மீண்டும் மீண்டும் நிகழும்போதும் கதகளியை உயிர்ப்புடன் நிலைநிறுத்துகிறது. ஒவ்வொரு கதைக்கும் அதற்கான திட்டவட்டமான கதைச்சந்தர்ப்பங்களும், பாடல்களும் எழுத்துவடிவில் உண்டு. அபிநயிப்பவர்களின் அடவுகள் சார்ந்த விதிமுறைகள் உண்டு. ஒரு கதகளி கதாப்பாத்திரம் அரங்கில் எந்தப்பக்கம் நிற்க வேண்டும், குறிப்பிட்ட கைமுத்திரையை இடதுகையில் காட்ட வேண்டுமா, வலது கையிலா என்பதற்குக்கூட விதிமுறைகள் உண்டு. என்றாலும், கதகளியில் ஒவ்வொருமுறையும் அதே கதாப்பாத்திரமே புத்தம்புதிதாக துலங்கிவருவது அந்த கதாப்பாத்திரத்தை நிகழ்த்தும் கலைஞனின் தனித்தன்மையின் ஊடுருவலால்தான். உதாரணமாக, கதாநாயகன் கதாநாயகியின் உருவ அழகை, அவளது குணநலன்களை புகழும்போது கதாநாயகி நாணம் கொள்வதாகவோ, பெருமிதம் அடைவதாகவோ நடிப்பார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அப்படித்தான் நடிப்பார்கள். நான் பார்த்த கதகளி ஒன்றில் கதாநாயகியாக நடிக்கும் கலைஞர் கதாநாயகனை பார்த்து ’சும்மா வெறுமனே புகழவேண்டாம்’ என்பதை கைமுத்திரையாக காண்பித்து சலித்துக்கொள்வதாக நடித்தார். அதற்கு எதிர்வினையாக கதாநாயகன் “ ஆயிரம் நாவுகள் கொண்ட அனந்தன் என்ற பாம்பால்கூட உன் அழகை விவரித்து முடிக்க முடியவில்லை “ என்று பதிலளித்தார். இதைப்போல கலைஞனின் தனிப்பட்ட கற்பனைத்திறனும், நுண்மையும், ஆழமும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுவதால்தான் கதகளியில் ஒரே கதையே மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும்போதும் புத்தம்புதியதாக இருக்கிறது. (ஆட்டக்கதையின் ஒவ்வொரு வரியும் கதகளி கலைஞனின் முகஃபாவம், நடனம், கைமுத்திரைகள் வழியாகவும்; கதகளி பாடகரின் பாடல் வழியாகவும் நிகழ்த்தப்படும். செண்டை, மத்தளம் போன்ற இசைக்கருவிகள் கலைஞனின் அபிநயத்திற்கும்; பாடகரின் ஃபாவத்திற்கும் வலு சேர்ப்பவை. முதலில் ஆட்டக்கதையை கதகளி பாடகர் பாட ஆரம்பிப்பார். அந்த பாடல்வரியை பாடப்படும்போதே கதகளி கலைஞர் தன் கைமுத்திரைகள் வழியாகவும், முகஃபாவம் வழியாகவும், உடல்மொழி வழியாகவும் அதை நிகழ்த்துவார். சில வரிகள் அதன் கற்பனை சாத்தியம் காரணமாக மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும். வரிவரியாக ஆட்டக்கதை நிகழ்த்தப்படும்போதே இடைவெளியில் எந்த பாடல்வரிகள் அற்ற கதகளி கலைஞனின் அபிநயம் வழியாக மட்டுமே (கைமுத்திரை, முகஃபாவம்) நிகழ்த்தப்படும் பகுதிகள் உண்டு. “தன்றேடாட்டம்”(ஒரு கதாப்பாத்திரம் தன் கடந்த காலத்தை நினைத்துப்பார்க்கும் பகுதி), விரிவாக நடிக்கப்பட வேண்டிய நிகழ்வுகள் (துரியோதனன் அரக்கு மாளிகையில் வழுக்கி விழுவது), இயற்கை வர்ணனை போன்ற பகுதிகள் கதகளி கலைஞனின் அபிநயத்தால் மட்டுமே நிகழ்த்தப்படும். அதற்கு துணையாக செண்டை, மத்தளம் இசைக்கப்படும். பாடல் வரிகள் அற்ற வெறும் அபிநயத்தால் மட்டும் நிகழ்த்தப்படும் பகுதிகளில் கதகளி கலைஞனின் தனிதன்மைகளும், அவரின் கற்பனைகளை வெளிப்படுத்தும் சுதந்திரமும் உண்டு. அதுபோக கதகளி கலைஞனின் எந்த உணர்வுநிலையும் கலக்காத அருவமான நடனங்களும் உண்டு.


கதகளியின் ஆட்டக்கதை என்பது இலக்கியப்பிரதியை போலத்தான். வரிகளுக்கு இடையேயான, சொற்களுக்கு இடையேயான மௌனம் வழியாகத்தான் அது செயல்படுகிறது. இலக்கிய வாசிப்பில் அந்த மௌனமான இடங்களில்தான் படைப்பாளியும் வாசகனும் சந்தித்துக்கொள்கிறார்கள். கதகளியில் அந்த மௌனம் கலைஞனின் அபிநயம் வழியாக செறிவுபடுத்தப்படும். பார்வையாளனும், கதகளி கலைஞனும், ஆட்டக்கதையை எழுதியவரும் அங்கு சந்தித்துக்கொள்கிறார்கள்.


கதகளியை நிகழ்த்தும் கதாப்பாத்திரம் எதையும் பேச அனுமதியில்லை. ஒரு கதாப்பாத்திரத்தின் உணர்வுநிலைகள் வெளிப்படுவது அந்த கதாப்பாத்திரத்தின் கைமுத்திரைகளாலும், முகஃபாவங்களாலும், உடல்மொழியாலும் கதகளி பாடகரின் பாட்டு வழியாகவும்தான். கதகளியின் அடிப்படை அலகு கைமுத்திரைகள். பரதரின் நாட்டிய சாஸ்திரத்திலிருந்து கதகளி 24 அடிப்படை கைமுத்திரைகளை உருவாக்கிக்கொண்டது. அந்த 24 அடிப்படை முத்திரைகளிலிருந்து கதகளியில் அதன் கதைசொல்லலுக்காக சுமார் 500 கைமுத்திரைகளை உருவாக்கிக்கொண்டது.


கதகளியில் கதாப்பாத்திரங்களின் வேஷங்களை பச்சை, கத்தி, தாடி, மினுக்கு, கரி என 5 வகையாக பிரிக்கலாம். இதில் உட்பிரிவுகளும் உண்டு.


சாத்வீகமான கதாப்பாத்திரங்களுக்கான வேஷத்தின் பெயர் பச்சை (நளன், யுதிஷ்டிரன், பீமன்) ரஜோ குணம் கொண்ட, தன்னகங்காரம் மிகுதியான , அரச கதாப்பாத்திரங்களுக்கான வேஷம் கத்தி (ராவணன், துரியோதனன், கீசகன், சிசுபாலன்). தாமஸ குணம் கொண்ட தீய கதாப்பாத்திரங்களுக்கான வேஷம் தாடி (துச்சாதனன், ஜராசந்தன்). பெண் கதாப்பாத்திரங்களுக்கும், முனிவர்கள், பிராமணர்கள் போன்றவர்களுக்கான வேடம் மினுக்கு (சீதை, தமயந்தி, குந்தி). அரக்கர்களுக்கும், அரக்கிகளுக்குமான வேடம் கரி (கலி, சூர்பனகை, சிம்ஹிகை, நக்ரதுண்டி).


இன்று கேரளத்தில் கதகளி ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது. அங்குள்ள கோவில்களின் உற்சவ காலங்களில் நிகழ்த்தப்படும் கலைநிகழ்ச்சிகளில் கதகளியும் உண்டு. கூடவே தனிப்பட்ட அரங்குகளில், மண்டபங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. பக்தர்களின் நேர்சைகளாக சில கோவில்களில் கதகளி நடத்தப்படுகிறது. திருவல்லா என்ற இடத்தில் உள்ள ஸ்ரீவல்லபா விஷ்ணுகோவிலில் கதகளி கடவுள் வழிபாட்டு சடங்கின் ஒரு பகுதியும்கூட. கதகளியை பார்க்க விழைபவர்கள் கதகளியின் அழகியல் பற்றிய அறிமுகமும், கதகளியின் ஆட்டக்கதைகளின் ஆங்கில வடிவமும் கொண்ட “David Bolland: A guide to kathakali” என்ற நூல் உதவியானது. கூடவே கதகளியின் கைமுத்திரைகளை அறிமுகப்படுத்தும் யூட்யூப் வீடியோக்கள் இருக்கின்றன. இந்த அறிமுகங்களுக்கு பிறகு கதகளியை நேரில் பார்த்தால் அது அணுக்கமாக ஆக சாத்தியமுள்ளது.

இந்த (கதகளி) ரசனை அமர்வில் நான் புகைப்படங்களை வைத்து சில விஷயங்களை விளக்கினால் தெளிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், நம் நிகழ்விடத்தில் இணையத்தொடர்பு கிடைக்காது என்பதால் நான் அரங்கில் என்னென்ன புகைப்படங்கள் பயன்படுத்தப்போகிறேன் என்பதை இந்த பக்கத்தில் அளிக்கிறேன். நண்பர்கள் இந்த பக்கத்தை அதன் புகைப்படங்களுடன் offlineல் download செய்து வைத்துக்கொள்ளவும். முடிந்தால், printout எடுத்துக்கொள்ளவும். கதகளியின் கைமுத்திரையை விளக்கும் பத்து நிமிட யூட்யூப் வீடியோவை ஒரு மாதிரிக்காக இணைக்கிறேன். நண்பர்கள் பார்த்துக்கொள்ளவும். 

புகைப்படங்கள்:

படம் 1: அழகிய ராவணன் 

C:\Users\MAP\Downloads\attachments (1)\FB_IMG_1683450536447.jpg        

      படம் 2- ஹனுமனின் விஸ்வரூபம்

C:\Users\MAP\Downloads\FB_IMG_1683469682991.jpg

படம் 3- ராவணனின் திரைநோட்டம்:

C:\Users\MAP\Downloads\FB_IMG_1683472058095.jpg

கைமுத்திரைகளின் படங்கள்:


படம் 4- கைமுத்திரைகள் 1

C:\Users\MAP\Downloads\kathakali-mudra-1-to-8.jpg

படம் 5- கைமுத்திரைகள் 2 

C:\Users\MAP\Downloads\kathakali-mudra-9-to-16 (1).jpg

       படம் 6- கைமுத்திரைகள் 3

C:\Users\MAP\Downloads\kathakali-mudra-17-to-24.jpg


Pathaka முத்திரை எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கும் யூட்யூப் வீடியோ:  கைமுத்திரை அறிமுகம்


வேஷங்கள்:

படம் 7- பச்சவேஷம் (சாத்வீகமான ஆண் கதாப்பாத்திரம்)

C:\Users\MAP\Downloads\attachments (1)\FB_IMG_1683468154751.jpg


படம் 8- பழுப்பு வேஷம் (தெய்வங்கள்)

C:\Users\MAP\Downloads\attachments (1)\FB_IMG_1683468590009.jpg


படம் 9- கத்தி வேஷம் (ரஜோ குணம் மேலோங்கிய கதாப்பாத்திரம்)


 C:\Users\MAP\Downloads\attachments (1)\FB_IMG_1683468147057.jpg


படம் 10- சுவன்ன தாடி (தமோகுணம் மேலோங்கிய கதாப்பாத்திரம்)



C:\Users\MAP\Downloads\attachments (1)\FB_IMG_1683468250099.jpg




படம் 11- கருத்த தாடி- (தீய தெய்வம்)


C:\Users\MAP\Downloads\attachments (1)\FB_IMG_1683468334666.jpg


படம் 12- கரிவேஷம்- (அரக்கி)

C:\Users\MAP\Downloads\attachments (1)\FB_IMG_1683468809966.jpg




படம் 13- மினுக்கு (சாத்வீகமான பெண் கதாப்பாத்திரம்)


C:\Users\MAP\Downloads\attachments (1)\FB_IMG_1683468670647.jpg














Comments

Popular posts from this blog

கதகளி பற்றி கூடுதலாக அறிந்துகொள்ள

கதகளி அறிமுகம்